அண்மைய நாட்களில் சில அமைச்சர்களுக்கிடையில் எழுந்துள்ள முரண்பாடுகள், அவா்களது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் முயற்சியை நோக்கமாகக் கொண்டவை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் தெரிவித்துள்ளது.
சுயாதீனமாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பில் இந்த விடயங்கள் தெரியவருவதாக குறிப்பிட்டுள்ள அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி , மக்கள் நலனுக்காக இவ்வாறான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவதானிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், தமது அதிகார திட்டமிடல்கள் குறித்து அரசியல்வாதிகள் சிந்திக்காமல் நாட்டுக்காக உழைக்க வேண்டிய அவசியம் காணப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.