குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டில் சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி வருவதாகவும் இன வாத கருத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் இனவாதத்தை தூண்டி யுத்தம் ஒன்றுக்கு நாட்டை இட்டுச் செல்வதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், இதுகுறித்து மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி சிங்கள பௌத்தர்களை காப்பது போன்று ஏனைய இன மத சமூகத்தினரையும் பாதுகாக்கும் என அவர் உறுதியளித்துள்ளார்.
எமது நாட்டில் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் தற்போது நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றே மிகவும் அவசியமானது எனவும் லக்ஸ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.