Home இலங்கைஇராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது

இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 563 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே தினத்தில் இவ்வாறு அதிக எண்ணிக்கையானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை முதல்முறையென இராணுவ பேச்சாளர் அலுவலகம தெரிவித்துள்ளார்.

இராணுவ காவல்துறை பிரிவு மற்றும் காவல்துறையினர் இணைந்து கடந்த 9ஆம் திகதி இந்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு மீண்டும் பணியில் இணைந்துக் கொள்ள கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டிருந்தது.

அந்த பொது மன்னிப்பு காலத்தில் சுமார் எட்டாயிரம் படையினர் சரணடைந்திருந்த நிலையில் அவர்கள் சட்டப்படி பணியில் இருந்து நீக்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More