கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழல் அயல் கிராமங்களை சேர்ந்த மக்களால் சிரமதானப் பணிகள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகவும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைக் கொண்ட ஓர் ஆலயமாகவும் காணப்படுகின்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெற உள்ளது
இந்த நிலையில் ஆலயத்தில் சுற்றுப்புறச் சூழல்களை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணிகள் அயல் கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையிலே இன்றைய தினம்(12-03-2022) கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஊரியான் கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த மக்களால் சிரமதான பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன. அதேபோல நேற்றும் நேற்று முன்தினமும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன