இரு சிறுவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு கிராமத்தில் பட்டம்பிட்டிய எனும் பகுதியில் சனிக்கிழமை (12) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.13 வயது மதிக்கத்தக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.
குறித்த இரு சிறுவர்களும் தங்கள் வீட்டிற்கு அருகே உள்ள காணி ஒன்றில் வழமை போன்று விறகு சேகரிக்க சென்ற நிலையில் இவ்வனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.மேலும் இச்சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 வயதினை சேர்ந்த முஹம்மட் இப்றாஹிம் , றியாஸ் முஹம்மட் ஆசீக் என்ற இரண்டு சிறுவர்களே உயிரிழந்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் குறித்த சம்பவம் இடம்பெற்ற காணியில் பொருத்தப்பட்டிருந்த யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டே இச்சிறுவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தில் சிக்கி இரு சிறுவர்கள் பலியான சம்பவம் தொடர்பில் விசாரணை
208
Spread the love
previous post