Home இலங்கைமாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

by admin

பொகவந்தலாவ- ​சென் மேரீஸ் மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும், மாணவன் ஒருவா் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். செல்வகந்தை தோட்டத்தைச் சேர்ந்த பாரதிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு நேற்று (13) மாலை சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை   காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

சென்மேரிஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, கிரிக்கெட் போட்டியைப் பார்க்கச் சென்ற குறித்த மாணவன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர் தேடிய போது  மரக்கறி தோட்டத்தில் உள்ள பாதுகாப்பற்ற ஆழமான கிணறு ஒன்றில் சடலமாக காணப்பட்டுள்ளாா்.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட மாணவனின் உதட்டுப்பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ள பொகவந்தலாவை காவல்துறையினா் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More