காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் அலிசப்ரியால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க காணாமல் போனோா் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின், குடும்பத்தினருக்கே இவ்வாறு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியை, ஒருமுறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.