நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் ஆபத்தான அரசியல் பொறியை வைக்க புலம்பெயர் தமிழர்கள் (தமிழ் டயஸ்போறா) முயன்று வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
நேற்று (27.03.22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இலங்கையை இவ்வாறான செயற்பாடுகளுக்கு காட்டிக் கொடுப்பதை தவிர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த காலங்களிலும் நாட்டை பிளவுபடுத்துவதற்கு புலம்பெயர் தமிழ் மக்களால் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சமரவீர எம்.பி குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனையே செய்ய முயல்வதாகவும் அவர் தெரிவித்தார்.