மேல் மாகாணத்தில் இன்று (01) நள்ளிரவு 12 மணியில் இருந்து நாளை (02) காலை 6 மணி வரை காவல்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளாா்.
இதேவேளை தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார். .
மிரிஹானவில் நேற்று ) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவா் இதனைத் தொிவித்துள்ளாா்.
சமூக ஊடகங்கள் மூலம் வன்முறை கள் எதனையேனும் செய்ய உந்துதல் அல்லது தூண்டுதலின் ஆபத்து இருந்தால், இவ்வாறு தற்போது உள்ள சட்டத்தின்படி செயல்பட வேண்டி ஏற்படும்.என அவா் குறிப்பிட்டுள்ளாா்