177
அரிசி மாபீயாக்காரர்களுடன் அரசாங்கத்திற்கு மோத நேரிட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி, காலி கரன்தெனிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சில தனிப்பட்ட நபர்களின் தேவைக்காக அரிசியின் விலையை உயர்த்துவதற்கு இடமளிக்கப்படாது என தெரிவித்த அவர், நாட்டில் தற்போது ஊடக சுதந்திரம் மித மிஞ்சிய அளவில் காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார். இதேவேளை அரிசி விலையை குறைப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love