பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவிவிலகி, இடைக்கால அரசாங்கத்தை அமைக்கவில்லை எனில், எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, 40 பேரடங்கிய சுயாதீன குழு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சுயாதீன குழு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியடையுமாயின், இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பிலான திட்டங்கள் குறித்தும் அந்தக் குழு கலந்துரையாடியுள்ளது எனவும், இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 20க்கு கீழ் மட்டுப்படுத்திக்கொள்வது குறித்தும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.