142
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடவுள்ளதாக அரசியல் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேவேளை, ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love