174
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரையில் 120 பேர் கையொப்பமிட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த வாரமளவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்
Spread the love