ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக வரும் 10-ந் தேதிக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
அப்படி மத்திய அரசு விடுதலை செய்யாவிட்டால் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பேரறிவாளனை விடுதலை செய்ய கோரும் வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள். இந்த வழக்கில் இருந்து தம்மை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டதை கடுமையாக விமர்சித்தது.
குறிப்பாக பேரறிவாளன் விடுதலை பற்றி தமிழ்நாடு அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை, ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்படவேண்டியது அவசியம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0000000000000000000000000000000000000
பேரறிவாளன் விடுதலை – அமைச்சரவைக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் – மத்திய அரசுக்கு காலக்கெடு!
170
Spread the love