157
நேற்றைய தினம் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார்.அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில் , நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 148 வாக்குகளை பெற்று மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love