Home இலங்கைபிரதிக் காவல்துறைமா அதிபர் மீது தாக்குதல் -காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்

பிரதிக் காவல்துறைமா அதிபர் மீது தாக்குதல் -காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம்

by admin

​கொழும்பு-02 கங்கா​ரா​ம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு சென்ற சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது, தாக்குதல் நடத்தியுள்ள பொதுமக்கள் அவரது வாகனத்தினையும் தாக்கியுள்ளனா். .அதனையடுத்து அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக, வானத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

காலிமுகத்திடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெரமுனவின் அரசியல்வாதிக்கு சிரேஷ்ட பிரதிக் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆதரவளித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More