Home இலங்கைபொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு

by admin

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போா் மற்றும் உயிர்ச் சேதம் ஏற்படுத்துபவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றின் மூலம் பாதுகாப்பு அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கலவரங்கள் தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள காவல்துறையினா் கலவரங்களில் மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

68 வீடுகள் மற்றும் 47 வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் 65 வீடுகள் மற்றும் 41 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More