156
யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி மந்திகை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
Spread the love