Home இலங்கையாழ் பொதுசன நூலக எரிப்பின் 41ஆவது நினைவேந்தலும் கருத்துப்பகிர்வும்.

யாழ் பொதுசன நூலக எரிப்பின் 41ஆவது நினைவேந்தலும் கருத்துப்பகிர்வும்.

by admin

யாழ்ப்பாணம் பொதுசன நூலக எரிப்பின் 41ஆவது நினைவேந்தலும் கருத்துப்பகிர்வும் யாழில் இளையோர்களின் ஏற்பாட்டில் 01.06.2022 (புதன்கிழமை) அன்று திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இதுவரை காலமும் தமிழர்கள் நாம், ஆற்றியவற்றையும், ஆற்றத் தவறியவற்றையும் வருங்காலத்தில் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் தொடர்பில் கருத்துப் பகிர்வும் இடம்பெற்றது. இதன் போது கருத்துரையாளர்களாக அரசியல் ஆய்வாளர் திரு. ம.நிலாந்தன் மற்றும் சமூக எழுச்சிச் செயற்பாட்டாளர் ம.செல்வின் இரேனியஸ் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

யாழில் கட்சிக் கட்டமைப்புக்களிற்கு, அப்பால் தமிழ்ச் சமூகம் தொடர்பில் தற்கால இளையோர்களிடையே இதுபோன்ற உரையாடல்கள் எழுந்து வருகின்றமை வரவேற்கத்தக்கனவாக அமைந்துள்ளன. இது போன்ற செயற்பாடுகள் தமிழ் இளையோரிடையே முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More