Home இலங்கைஜொன்ஸ்டன் உட்பட 5 பேர் சந்தேகநபர்களாக அடையாளம்!

ஜொன்ஸ்டன் உட்பட 5 பேர் சந்தேகநபர்களாக அடையாளம்!

by admin

நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம உட்பட 4 பேர் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குறித்த நபர்கள் சந்தேக நபர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நாடாளளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க மற்றும் 11 சந்தேகநபர்களும் ஜூன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More