Home இலங்கைமாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி நடைப்பயணம்!

மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி நடைப்பயணம்!

by admin

மாற்றுப்பாலின சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் எனும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வானவில் நடைபயண ஒருங்கிணைவு பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ் பேருந்து நிலையம் முன்பாக தொடங்கும் பேரணி சத்திர சந்தியை சென்றடைந்து ஆஸ்பத்திரி வீதியிலுள்ள கார்கில்ஸ் கட்டிட தொகுதியை வந்தடையும்.

சமத்துவம், சுயமரியாதை, மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், இந்த பேரணியில் எம்முடன் கைகோர்த்து நடக்க வருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More