Home இலங்கையாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!

by admin

யாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டமையால் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை முதல் இராணுவத்தினர் மண்ணெண்ணெய் விநியோகத்திற்கு என பதிவுகளை முன்னெடுத்தனர்.

அதனை கேள்வியுற்று பலர் பதிவுகளை மேற்கொள்ள முண்டியடித்தனர். அதன் போது எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் , விவசாயிகளுக்கு விநியோகிக்கவே மண்ணெண்ணெய் உள்ளது எனவும் , ஏனையோருக்கு வழங்க முடியாது எனவும் கூறினார்கள். அத்தனையும் பொருட்படுத்தாது இராணுவத்தினர் பதிவுகளை முன்னெடுத்தனர்.

அதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் , கோப்பாய் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அதனை அடுத்து பிரதேச செயலர் மண்ணெண்ணெய் விவசாயிகளுக்கு மாத்திரமே பகிர்ந்தளிக்க உள்ளோம். ஏனையோருக்கு விநியோகிக்க முடியாது என இராணுவத்தினருக்கு தெரிவித்ததை அடுத்து , இராணுவத்தினர் பதிவு நடவடிக்கைகளை இடை நிறுத்தினார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More