170
ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமித்து தான் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதுடன் அமைச்சர்களும் பதவி விலகுவாா்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,தெரிவித்துள்ளாா்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையொற்றிய போதே அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா்
மேலும் தாங்கள் வேலைத்திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும் அதனை முன்னெடுக்க உதவுதாறு கோாிய பிரதமா் , வீதிக்கு இறங்க வேண்டிய தேவையில்ல எனவும் எதிர்வரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நாடாளுமன்றத்தை கூட்டி, விவாதத்தை நடத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா்.
Spread the love