கடந்த 10ஆம் திகதி வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த சந்தைப் பகுதியில் வைத்து வெல்லவாய காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிறுமிக்கு, யோகட் வாங்கித் தருவதாக தெரிவித்து அழைத்துச் சென்ற சிறுமியின் வீட்டில் கூலித் தொழில் செய்து வந்த தியதலாவை- குருதலாவ பகுதியைச் சேர்ந்த 25 வயதான நபா் ஒருவா் இது தொடா்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுமியை வெல்லவாய நகரிலிருந்து பண்டாரவளைக்கு பேருந்தில் அழைத்துச் சென்று அங்கு வாராந்த சந்தைப் பகுதியில் இரவைக் கழித்து விட்டு மறுநாள் குருதலாவையிலுள்ள அவரது வீட்டுக்குச் செல்ல முற்பட்ட போது சந்தைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை பணத்துக்கு விற்பதற்கு சந்தேகநபர் தயாராகி இருந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.