Home இலங்கைஇரு இலங்கையா்கள் சென்னையில் கைது

இரு இலங்கையா்கள் சென்னையில் கைது

by admin

சுங்க அதிகாரிகள் போல் நடித்து இலங்கைப் பயணி ஒருவரிடம் தங்க நகைகளை கொள்ளையடித்த இரண்டு இலங்கையா்களை சென்னை விமான நிலைய காவல்துறையினா் கைது செய்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்ற 47 வயதான பெண்ணை விமான நிலையத்திற்கு வெளியே நிறுத்தி, தங்களை சுங்க அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட இலங்கைப் பிரஜைகளான 31 மற்றும் 40 வயதான இருவரும் அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி நகைகளை எடுத்துச் செல்வதாக தொிவித்து , நகை மற்றும் வளையல்களை எடுத்துச் சென்றுள்ளனா்.

அவா்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெண் , சுங்கத்துறைக்கு சென்று அவர்கள் மீது முறைப்பாடு தொிவித்த நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More