மன்னார் மற்றும் பூநகரியில் செயற்படுத்தப்படவுள்ள இரண்டு காற்றாலை மின் உற்பத்தி நிலைய செயற்றிட்டங்களை செயற்படுத்த அதானி நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
286 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் மன்னாரிலும் 234 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் பூநகரியிலும் அமைக்கப்படவுள்ளதாகவும் இந்த இரண்டு செயற்றிட்டங்களின் பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை நீண்ட காலமாக மின்சார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாமையினால் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள 26 மின்சார செயற்றிட்டங்களுக்கான அனுமதி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.