பிாித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். இச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராணி இன்று பிற்பகல் பால்மோரலில் அமைதியாக மரணமடைந்தார் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முன்னதாக, உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கவலை அடைந்ததை அடுத்து பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்திருந்தது.
அவர் அரியணையேறி 70 ஆண்டுகளை ப் பூா்த்தி செய்த நிலையில் பிரித்தானிய வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய ராணி என்ற பெருமையைப் பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மரணத்துடன், முன்னாள் வேல்ஸ் இளவரசரான அவரது மூத்த மகன் சார்ல்ஸ், புதிய அரசராக இருந்து 14 காமன்வெல்த் நாடுகளுக்குத் தலைவராக விளங்குவதுடன் நாட்டை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது