154
130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் 05 இந்திய பிரஜைகளும் 05 இலங்கையர்களும் வட மேல் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய படகொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 434 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
படகில் கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா தொகையை நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து, இலங்கையர்களிடம் பரிமாற்றும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
Spread the love