இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல் இடம்பெறுவதால், இலங்கை தொடர்பான வலுவான பிரேரணையை முன்வைக்குமாறு 04 சர்வதேச அமைப்புகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச மன்னிப்பு சபை, Human Rights Watch, Forum Asia, சர்வதேச நீதிபதிகள் ஆணையகம் ஆகியன இணைந்து இலங்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளன.
பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள இலங்கையில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்ய வேண்டியேற்பட்டதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸவின் பிம்பமாக வந்த ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் மற்றும் அமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரத்தை இல்லாது செய்வதற்கு பல்வேறு அடக்குமுறைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரண மக்களை அடக்குவதற்கு பயன்படுத்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட 4 அமைப்புகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளன.