Home உலகம்கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் ஜனாதிபதி

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் ஜனாதிபதி

by admin

கார் விபத்தில் சிக்கிய உக்ரைன் ஜனாதிபதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் . ரஸ்ய படை படைகள் கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைன் மீண்டும் மீட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட உக்ரைன் வடக்கு பிராந்தியத்தில் உள்ள இசியம் நகருக்கு சென்ற ஜெலன்ஸ்கி போரால் சேதமான பகுதிகளை பார்வையிட்டதன் பின்னா் கிவ் நகருக்கு காரில் திரும்பி கொண்டு இருந்த போது அவர் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஜெலன்ஸ்கி லேசான காயம் அடைந்ததாக அவரது செய்தி தொடர்பாளர் நிகிபோ ரோவ் தெரிவித்து உள்ளார். விபத்து நடந்ததும் அவருடன் சென்ற மருத்துவர்கள் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது கார் சாரதி ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்ததன் பின்னர் அம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் ஜெலன்ஸ்கிக்கு உடலில் எந்த இடங்களில் காயங்கள் ஏற்பட்டது என்ற எந்த விவரங்கள் வெளியாகாத நிலையில் விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More