கிளிநொச்சி முருகானந்தாக் கல்லூரிக்கு ஒரு ஆளுமையான அதிபரை நியமித்து தமது பிள்ளைகளின் கல்வியை பாதுகாக்குமறு பெற்றோர்கள் பழைய மணவர்கள் பொது அமைப்புக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளதுடன் மகஜா்“ ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முதல் நிலை பாடசாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற கிளி முருகானந்தா கல்லூரிக்கு பொருத்தமான அதிபரை நியமிக்காத நிலையில் தற்போது கல்வியில் பின்தங்கி காணப்படுகின்றது
அத்துடன் பாடசாலையில் இருந்து பெருமளவான சொத்துக்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் என்பவற்றிற்கு தெரியாமலும் அனுமதிகளின்றியும் கானாமல் போயுள்ளன
இந்நிலையில் குறித்த பாடசாலையினுடைய வளர்ச்சிக் கருதி தற்போதுள்ள ஆளுமையற்ற அதிபரை இடமாற்றி ஆளுமையுள்ள ஒரு அதிபரை பாடசாலைக்கு நியமிக்க கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தாவை முருகானந்தா கல்லுாரி பழைய மாணவர்கள் பெற்றோர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என 25இற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு (15-09-2022) சந்தித்துக் கலந்துரையாடி பெற்றோர்கள் பொது அமைப்புக்கள் கையெழுத்திட்ட மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனார்.
குறித்த சந்திப்பின் போது மேலதிக இணைப்பாளர் கோ. றுசாங்கள் மாவடட அமைப்பாளர் வை. தவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொனண்டிருந்தனர்