167
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.
சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை , வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
Spread the love