Home இலங்கைமணற்காட்டில் சவுக்கு மரங்களை வெட்டி சைக்கிளில் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

மணற்காட்டில் சவுக்கு மரங்களை வெட்டி சைக்கிளில் கடத்த முற்பட்ட இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் கைது

by admin

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மணற்காட்டு பகுதியில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட 07 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மணற்காட்டில் சட்டவிரோதமான முறையில் சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டு துவிச்சக்கர வண்டிகளில் கடத்தப்படுவதாக  பருத்தித்துறை காவல்துறையினருக்கு இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றது. 

அதனை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , அப்பகுதியில் சவுக்கு மரங்களை வெட்டி துவிச்சக்கர வண்டியில் கடத்த முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 07 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களின் துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More