196
யாழ்ப்பாணம் வல்வட்டிதுறை, பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டமை தொடர்பில் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய மூவருமே கைது செய்யப்பட்டனர்.
பலாலி அன்ரனிபுரத்தைச் சேர்ந்த 20, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே பொலிகண்டி பகுதியில் வைத்து வல்வெட்டித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Spread the love