182
இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று (14.10.22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது சீனாவின் கொரோனா பொதுக் கொள்கை அனுமதிக்கும் பட்சத்தில் சீன சுற்றுலாப் பயணிகள் விரைவில் இலங்கைக்கு பயணிக்கத் தொடங்குவார்கள் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் மகிந்த மஹிந்த ராஜபக்சவுக்கு உறுதியளித்துள்ளார்.
இதன்போது இருவரும் இலங்கைக்கும் சீன மக்கள் குடியரசிற்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
Spread the love