167
ஐசிசி யின் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று அவுஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் ஆரம்பமாகின்றது. நவம்பா் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் போட்டியில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இன்றையதினம் குரூப் ஏ பிரிவின் முதலப் போட்டியில் முதல் இலங்கை மற்றும் நமீபிய அணிகள் போட்டியிடுகின்றன. இப்பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இச்சுற்றில் நமீபியா, நெதா்லாந்து, இலங்கை, யுஏஇ, அயா்லாந்து, ஸ்கொட்லாந்து, மே.இந்திய தீவுகள், சிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் இடம் பெற்றுள்ளன.
அதேவேளை ஒக்டோபா் 22 இல் ஆஆரம்பமாகவுள்ள சூப்பா் 12 சுற்றின் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான அவுஸடாிரேலியாவும் -நியூஸிலாந்தும் போட்யிடுகின்றன. சூப்பா் 12 பிரிவில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக இடம் பெற்றுள்ளன.
இதில் வெற்றி பெறும் சம்பியன் அணிக்கு ரூ.13.9 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. ரன்னா் அப் அணிக்கு ரூ.6 .6 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெறும் 2 அணிகளுக்கு தலா ரூ.3.3 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அவுஸ்திரேலேயாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் மொத்தம் 45 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love