164
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு – மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான பணியகத்தின் உதவிச்செயலாளர் டொனால்ட் லூ எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது பயணத்தின்போது மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் எனவும் அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Spread the love