இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டான்சேனை ராணுவ முகாமுக்கு அண்மித்த காணியில் மனித எச்சங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகின.
சட்ட மருத்துவ அதிகாரிகள் உட்பட உரிய துறைசார் அதிகாரிகள் இந்த அகழ்வுப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் காணி உரிமையாளரால் காணியில் கட்டிட நிர்மாணத்தின் நிமித்தம் குழி வெட்டிய வேளை, மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் சில தடயங்கள் அங்கு காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்ற மட்டக்களப்பு – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள குறித்த ராணுவ முகாம், கடந்த இந்த இடத்தின் பெரும்பாலான காணிகள், பொது மக்களின் வீடுகள் மற்றும் அரசாங்க பாடசாலையையும் கைப்பற்றியிருந்த படையினர், கைப்பற்றியிருந்த காணிகளில் ஒரு பகுதியை கடந்த 2014ஆம் ஆண்டு மீளவும் ஒப்படைத்திருந்தனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளில் ராணுவ முகாம் வேலியுடன் சேர்ந்ததாக உள்ள காணியில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் வீடு அமைப்பற்கான பணிகளை மேற்கொண்டபோது எலும்பு எச்சங்களும் டயர் மற்றும் புகையிரத சிலிப்பர் கட்டைகளை எரித்த கரிகளும் தென்பட்டுள்ள நிலையில் காவல்துறையினருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து வீடமைப்பு பணிகள் தற்காலிகமாக கைவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளும் தொடர்கின்றன.
முறக்கொட்டாஞ்சேனையில் ராணுவ முகாம் அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் மேலதிக ஆய்வு
Feb 19, 2017 @ 08:07
மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் ராணுவ முகாம் அருகே மனித எச்சங்கள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தை திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் தடயங்கள் காணப்பட்ட இடத்துக்கு இம்மாதம் 2ஆம் திகதி சென்ற மேலதிக நீதவான் தலைமையிலான விசேட குழு அங்கு விசாரணைகளை மேற்கொண்டிருந்ததோடு திங்கட்கிழமை குறித்த இடத்தை அகழ்ந்து ஆய்வுசெய்ய தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – கொழும்பு பிரதான நெடுஞ்சாலை அருகே முறக்கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள குறித்த ராணுவ முகாம், கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இந்த இடத்தின் பெரும்பாலான காணிகள், பொது மக்களின் வீடுகள் மற்றும் அரசாங்க பாடசாலையையும் கைப்பற்றியிருந்த படையினர், கைப்பற்றியிருந்த காணிகளில் ஒரு பகுதியை கடந்த 2014ஆம் ஆண்டு மீளவும் ஒப்படைத்திருந்தனர்.