மீள் குடியேற்ற அமைச்சால் வழங்கப்படவுள்ள பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு சொந்த காணிகள் இல்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பொருத்து வீடுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட போது விண்ணப்பித்தவர்களுக்கு சொந்தமாக காணி உள்ளதா ? என்பது தொடர்பில் கேட்கப்படவில்லை எனவும் ஊடகங்களில் விளம்பரப்படுத்தி விண்ணப்பங்கள் கோரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக பலர் விண்ணப்பித்த போதும் அவர்களுக்கு சொந்தமாக காணி உண்டா என்பது தொடர்பில் உறுதிப்படுத்த படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த காலங்களில் வீட்டு திட்டங்களுக்கு பயனாளிகள் தெரிவு செய்யப்படும் போது புள்ளிகள் வழங்கப்பட்டு தெரிவுகள் இடம்பெற்றன. இதில் அது எதுவும் இல்லை. வீடு வேணுமா ? விண்ணப்பியுங்கள் என கோரினார்கள் அதற்காக பலர் விண்ணப்பித்து உள்ளார்கள்.
அத்துடன் விண்ணப்பித்தவர்களில் பலர் நேரடியாக மீள் குடியேற்ற அமைச்சுக்கும் விண்ணப்பங்களை நேரடியாக அனுப்பி வைத்து உள்ளதுடன் கிராம சேவையாளர்கள் ஊடாகவும் விண்ணபித்து உள்ளனர். அதனால் பலர் இரண்டு தடவைகள் விண்ணபித்து உள்ளார்கள். இவ்வாறன நிலையில் எவ்வாறு பயனாளிகளை தெரிவு செய்ய போகின்றர்கள் என்பது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
இதனை பார்கையில் இது வெறுமன தமது அரசியல் நோக்குக்காக எத்தனை பேர் பொருத்து வீட்டை கோருகின்றார்கள் என்பதனை காட்டவே ஊடகங்களில் விளம்பரம் செய்து விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு உள்ளனர் என மேலும் தெரிவித்தார்.