Home இலங்கைகாவற்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான சிறுவன் உயிாிழப்பு

காவற்துறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான சிறுவன் உயிாிழப்பு

by admin

கடந்த 28ஆம் திகதியன்று மாத்தறை, யக்கலமுல்லையில் காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று (30) உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, யக்கலமுல்லையில் காவற்துறை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக? இயங்கியதில் பாடசாலை மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிாிழந்துள்ளாா்.

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த போது, ​​அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட சென்ற போது, ​​ குறித்த காவற்துறை உத்தியோகத்தரின் துப்பாக்கி இயங்கியதாலேயே மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More