Home இலங்கைதென்கொரிய ஹாலோவின் திருவிழாவில், இலங்கையர் உள்ளிட்ட 151 பேர் மரணம்!

தென்கொரிய ஹாலோவின் திருவிழாவில், இலங்கையர் உள்ளிட்ட 151 பேர் மரணம்!

by admin

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை (29.10.22) ஏற்பட்ட ஹாலோவின் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர் காயமடைந்துள்ளர். உயிரிழந்தவர்களில் இலங்கை​யைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றார். கண்டியைச் சேர்ந்த 27 வயதான ஆண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது

முதலில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது என்பது குறித்து இன்னும் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், பெருந்தொற்றுக்குப் பின் முதல் முறையாக நடக்கும் முகக் கவசம் அணியாத ஹாலோவீன் திருவிழா இது எனத் தெரிவிக்கப்படுிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More