171
தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது இடம்பெற்ற அமளி குறித்து சட்டசபை செயலாளர் ஜமாலுதீனிடம், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.
நேற்றையதினம் சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெற்ற வேளை நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
எனினும் சபாநாயகர் தனபால் அதனை ஏற்காமையினால் ; சட்டசபையில் அமளி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love