கந்தக்காடு புனவர்வாழ்வு நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவா்கள் டவெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பியோடிய வா்களில் 35 பேர் சரணடைந்துள்ளதாகவும் ஏனையவர்களை இராணுவத்தினர் காவல்துறையினா் இணைந்து தேடிவருவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை தடுத்துவைத்து இராணுவத்தினர் பராமாித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் காலி பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரை மாதம்பை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தலையில் தாக்கியதையடுத்து இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது
இதனையடுத்து அங்கு நிலமையை கட்டுப்பாட்டிற்கு கோண்டுவர காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினரும் தாக்கப்பட்டதில் காவல்துறைபொறுப்பதிகாரி, இரு காவல்துறையினர் ஒரு இராணுவத்தினர் மற்றும் 6 கைதிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.