இஸ்ரேல், ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இரகசியமாக சந்தித்து சமாதானம் குறித்து பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓரு ஆண்டுக்கு முன்னதாக குறித்த நாடுகள் இவ்வாறு சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பரக் ஒபாமா கடமையாற்றிய காலத்தில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய ஊடகமான Haaretz இல் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த இரகசிய பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ம் திகதி ஜோர்தானின் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள அக்பா என்னும் விடுதியில் இந்தப் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜோர்தான் மன்னர் அப்துல்லா, எகிப்து ஜனாதிபதி Abdel Fattah al-Sisi ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.