188
யாழ்ப்பாணத்தில் மோப்ப நாயின் உதவியால் ,போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி காவல்துறையினர் மோப்ப நாயின் உதவியுடன் தமது பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை , கரணவாய் , தும்பளை , குடவத்தை ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் , 83 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 80 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்காக நெல்லியடி காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
Spread the love