பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனா். அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் விரைவாக பரவிய தீ கொளுந்துவிட்டு எரிந்தமையினால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளித்தநிலையில் 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிாிழந்தவா்களின் உடல்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்களின் மு . தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்..