178
தொழில்வாய்ப்பு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பிரஜை உள்ளிட்ட இருவர் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஏனைய இலங்கை பிரஜைகள் இருவர் தலா 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி சட்டவிரோதமாக நேர்முகத் தேர்வு நடத்திய நால்வர், நேற்று முன்தினம்(20.11.22) பதுளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர்.
முகப் புத்தகத்தில் விளம்பரம் செய்யப்பட்டே குறித்த நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Spread the love