Home இலங்கைசமூர்த்தி கொடுப்பனவு பெற சென்ற மூதாட்டி வீட்டில் கொள்ளை

சமூர்த்தி கொடுப்பனவு பெற சென்ற மூதாட்டி வீட்டில் கொள்ளை

by admin
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை  காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் திங்கட்கிழமை  பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி  காவல்துறைக்காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது..

 சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More