Home இலங்கைஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்.

by admin

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளை க்யூ பிரிவு  காவல்துறையினா்  இன்று (21)  கைப்பற்றியுள்ளனர். தூத்துக்குடி புல்லாவெளி  கடற்கரையில் இன்று புதன் கிழமை (21)அதிகாலை 4 மணியளவில், க்யூ  பிரிவு காவல்துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லொரியை சோதனையிட்ட போதே இவ்வாறு  பீடி இலைகள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

 இதன்போது  சுமார் 1½ தொன் எடையுள்ள பீடி இலைகளை   பறிமுதல் செய்த காவல்துறையினா்  அதன் மதிப்பு   இலங்கையில்   45 லட்சம்  ரூபா ஆகும் எனத் தொிவித்துள்ளனா்.

  பீடி இலைகள் தொடர்ச்சியாக இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்டு வருகின்ற  நிலையில்   பீடி இலைகளை சட்ட விரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற   நபர்களை காவல்துறையினா் தேடி வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More