Home உலகம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு தடை!

பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு தடை!

by admin

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்குமென அந்நாட்டின் உயர் கல்வி அமைச்சர் வௌியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடை உடனடியாக அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே பெரும்பாலான இடைநிலை பாடசாலைகளிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையானது அவர்களின் கல்வியை மேலும் கட்டுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 03 மாதங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான பெண்கள், பல்கலைக்கழக அனுமதிக்கான பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல்கலைக்கழகங்களில் பெண் மாணவர்களுக்கு பெண் பேராசிரியர்கள் அல்லது வயதான ஆண்கள் மாத்திரமே கற்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More